கோயில் கோயிலாக வலம்வரும் இயக்குனர் விஷ்ணுவர்தன்!

கோயில் கோயிலாக வலம்வரும் இயக்குனர் விஷ்ணுவர்தன்!

செய்திகள் 27-Oct-2015 9:53 AM IST Chandru கருத்துக்கள்

ஆக்ஷன் படங்களுக்குப் பெயர் போனவர் விஷ்ணுவர்தன். அவரின் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘யட்சன்’ படம் எதிர்பார்த்த வெற்றிப்பெறாத நிலையில், தனது அடுத்த படத்தை பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். 9ம் நூற்றாண்டில் நடைபெறும் வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாம். ஆனால், ஆரம்பம், யட்சன் போன்ற படங்களில் கமிட் ஆனதால் தனது கனவு புராஜெக்ட்டை தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தார்.

மீண்டும் அதற்கான நேரம் தற்போது கைகூடியிருப்பதால், வரலாற்றுப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக களமிறங்கியிருக்கிறார் விஷ்ணு. அதன் முதல்கட்டமாக இந்தியாவிலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றாகச் சென்று, அதைப் பற்றிய வரலாற்று விவரங்களை சேகரித்து வருகிறாராம். இந்த வரலாற்றுப் படத்தை உருவாக்கும் பணியில் எழுத்தாளர் பாலகுமாரன் முக்கிய பங்கு வகித்து வருகிறாராம்.

தனக்கு தேவைப்படும் கோயில்களின் விவரங்கள் அனைத்தையும் திரட்டியபிறகு, முழுமையான திரைக்கதையை உருவாக்கிய பின்பே, அப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள், எந்தெந்த டெக்னீஷியன்கள் பணிபுரிவார்கள் என்பன விவரங்களை வெளியிடவிருப்பதாகவும் இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;