தனுஷ் படத்தை புகழ்ந்து தள்ளிய கௌதம் மேனன்!

தனுஷ் படத்தை புகழ்ந்து தள்ளிய கௌதம் மேனன்!

செய்திகள் 26-Oct-2015 2:52 PM IST VRC கருத்துக்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் முதலானோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதோடு நல்ல வசூலையும் அள்ளி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இப்படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபனின் நடிப்பை வெகுவாக ரசித்து, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ள கௌதம் மேனன் பார்த்திபன் நடிப்பு குறித்து, ‘பார்த்திபன் சார் உங்களை போடணும் சார்! இது மாதிரி வித்தியாசமான நெகடீவ் ரோல்களில் உங்களை எல்லோரும் போடணும் சார்!’ என்று குறிப்பிட்டுள்ளதோடு நயன்தாரா குறித்து, ‘பவர் ஹவுஸ், என்னவொரு பர்ஃபார்மென்ஸ்’ என்று பாராட்டியுள்ளார். விஜய்சேதுபதி குறித்து குறிப்பிடுகையில் ‘பெரிய ஹீரோவுக்கான படியில் ஏறிவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனனின் இந்த பாராட்டால் இப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் தனுஷ் உட்பட அனைத்து படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;