லத்தி எடுக்கும் நிக்கி!

லத்தி எடுக்கும் நிக்கி!

செய்திகள் 26-Oct-2015 2:36 PM IST VRC கருத்துக்கள்

‘வெள்ளகார துரை’ படத்திற்குப் பிறகு எழில் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘டார்லிங்’ பட ஹீரோயின் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படத்தின் கதைப்படி நிக்கி கல்ராணி அர்ச்சனா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் இவரது அறிமுக காட்சியே லத்தியை எடுத்து நான்கைந்து பேரை அடிப்பது போலவும், விரட்டுவது போலவும் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த போலீஸ் கேரக்டரில் நடிப்பதற்காக நிக்கி கல்ராணி ஒரு சில வாரங்கள் சண்டை பயிற்சி எடுத்துள்ளார். இந்த படம் தவிர ‘கோ-2’ மற்றும் சாய்ரமணி இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஒரு படம் என நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;