‘பாகுபலி-3’ அதிகாரபூர்வமாக அறிவித்த ராஜமௌலி!

‘பாகுபலி-3’ அதிகாரபூர்வமாக அறிவித்த ராஜமௌலி!

செய்திகள் 26-Oct-2015 12:26 PM IST Top 10 கருத்துக்கள்

இந்திய சினிமாவில் பல சாதனைகள் புரிந்த படம் ராஜமௌலியின் ‘பாகுபலி’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருப்பதாக இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ள நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகமும், எடுக்கப்படவிருக்கிறது என்றும், இந்த பாகம் முந்தைய பாகங்களை விட மிகப் பிரமாண்டமான முறையில் உருவாக இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்படி ‘பாகுபலி’ குறித்து முரண்பாடான பல தகவல்கள் வெளியாவதை பார்த்த இயக்குனர் ராஜமௌலி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு டிசம்பார் மாதம் துவங்கவிருக்கிறது என்றும் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டு வேலைகள் நடந்து வருகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் ‘பாகுபலி’ படத்தின் கதை இரண்டாம் பாகத்துடன் முடிவடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தான் வேறொரு கதையை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த கதைக்கும் ‘பாகுபலி’ கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ள ராஜமௌலி அந்த படம் ரசிகர்கள் இதுவரை பார்க்காத வகையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதனால் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட படம் உருவாக இருக்கிறது என்பது உறுதியாகி விட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;