திடீர் விசிட் அடித்த அஜித்... உற்சாகத்தில் ‘வேதாளம்’ டீம்!

திடீர் விசிட் அடித்த அஜித்... உற்சாகத்தில் ‘வேதாளம்’ டீம்!

செய்திகள் 26-Oct-2015 12:00 PM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. அஜித்தின் தங்கையாக லக்ஷ்மிமேனனும், ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் நடிக்கும் இப்படத்தில் மயில்சாமி, தம்பி ராமையா, சூரி, ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் தன் பகுதிக்கான டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்துள்ள அஜித், நேற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கும் இடத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தாராம். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த இடத்திற்கு ‘தல’ அஜித் வந்ததால் சந்தோஷ அதிர்ச்சிக்குள்ளானார்களாம் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். வேலைகள் எவ்வளவு முடிந்திருக்கிறது என்பதை விசாரித்த அஜித், அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும்படி உற்சாகமூட்டிச் சென்றதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒருசில நாட்களில் சென்சாருக்குச் செல்லவிருக்கும் ‘வேதாளம்’ தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;