இன்னும் 9 நாட்களில் சூர்யாவின் 24!

இன்னும் 9 நாட்களில் சூர்யாவின் 24!

செய்திகள் 26-Oct-2015 11:19 AM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ‘2டி’ நிறுவனம் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க-2’, விக்ரம் கே.குமார் இயக்கத்தில் ‘24’ ஆகிய படங்களை தயாரிக்கிறது. தமிழி ‘அலை’, ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய ‘மனம்’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தனது மூன்றாவது தமிழ் படமாக இயக்கும் ‘24’ படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 9 நாட்களில், அதாவது தீபாவளிக்கு முன்னதாக முழு படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெறவிருக்கிறது. வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - வான் வருவான் பாடல் ப்ரோமோ


;