கமலை இயக்குவதாக வதந்தி! - ஆதிக் ரவிச்சந்திரன் வருத்தம்

கமலை இயக்குவதாக வதந்தி! - ஆதிக் ரவிச்சந்திரன் வருத்தம்

செய்திகள் 26-Oct-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க ‘பிட்டுப்படம்’ என்ற அடைமொழியோடு வெளிவந்து இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிய படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். சமீபத்தில் ஆதிக்கும், அவரது தந்தையும் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதி பெற்றனர். அந்த புகைப்படத்தை தன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் அவர். அதனை வைத்து சில இணையதளங்கள் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என செய்திகளை பரப்பிவிட்டனர். இதனை மறுத்து விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஆதிக். அவர் கூறியதாவது,

அன்புள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,
வணக்கம்,

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி பெற்றதற்காக எனக்கும் என் தந்தைக்கும் ரோல் மாடலாக இருக்கும் உலகநாயகன் பத்மபூஷன் டாக்டர். கமல் ஹாசன் அவர்களின் ஆசி பெற அனுகிய போது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு எங்களை சந்தித்தார். வருடன் மகழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்த போது எங்கள் வாழ்நாளில் ஒரு பெரிய கனவு நினைவானதாகவே உணர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் பார்க்கும்படி கோரிக்கை வைத்த போது பெருந்தன்மையுடன் பரிசீளிப்பதாக கூறினார்.

இந்நிலையில் இன்று ஒரு நாளிதழில் நான் அவரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாகவும், படத்தை பற்றிய காட்சிகள் பற்றி அவரிடம் விவரித்ததாகவும் செய்திகள் வெளியாகிவுள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும். சினிமா வாழ்வில் ஆரம்பகட்டதில் இருக்கும் எனக்கு இச்செய்தி அதிர்ச்சி தருகிறது. நானும் என் தந்தையும் என்றென்றும் உலகநாயகனின் உண்மையான மற்றும் நேர்மையான ரசிகர்கள். இந்த செய்தி பிரசுரத்தமையால் அவர் மனம் புண்படும்படி நேர்ந்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

இப்படிக்கு,
ஆதிக் ரவிசந்தரன்

என பத்திரிகையாளர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;