நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு பதவி!

நடிகர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு பதவி!

செய்திகள் 26-Oct-2015 9:53 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான 'பாண்டவர் அணி' வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் சங்க புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது நடிகர் சங்கத்தின் அறங்காவலரில் ஒருவராக இருக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்திருப்பதாக நடிகர் சங்கத்தின் புதிய செயலாலர் விஷால் தெரிவித்தார். அத்துடன், ‘கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட அனைத்து மூத்த கலைஞரக்ளின் ஆசியுடனும், ஆதரவுடனும் நடிகர் சங்கம் நல்ல முறையில் செயல்படும் என்றும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை’’ என்றும் விஷால் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;