புலி கேம் : ஐபோன் பரிசு!

புலி கேம் : ஐபோன் பரிசு!

செய்திகள் 24-Oct-2015 4:07 PM IST Chandru கருத்துக்கள்

நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ ,மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கிறது..இவை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றும் வருகின்றன.

இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில நாயகர்களின் பெயரில் இப்படி கேம்கள் வந்துள்ளன. இளைய தளபதி விஜய் நடித்த 'கத்தி' யைத் தொடர்ந்து அண்மையில் இந்த புதிய மொபைல் கேம். வெளியாகிவுள்ளது. இதன் பெயர் ' எபிக் க்ளாஷ்' (EPIC CLASH) என்பதாகும்.இந்த 3D மொபைல் கேமை பதிவிறக்கம் செய்து இப்போதே விளையாடலாம்.

விஜய்க்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் கேம் பற்றி அறிந்து வியந்த நடிகர் விஜய், இதை வெளியிட அனுமதி வழங்கி இருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மொபைல் கேம் ரசிகர்களுக்கும் விறு விறு விருந்தாக இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேமில் பல நிலைகள் அதாவது 'லெவல்கள்' உள்ளன. இதை தினமும் விளையாடி எடுக்கிற பாயிண்ட்களை தினமும் அதில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ' ஸ்கிரீன் ஷாட்' எடுத்து அனுப்பவேண்டும். இப்படி 30 நாளும் தொடர்ந்து அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புகிறவர்களில் அதிக புள்ளிகள் எடுப்பவர்களுக்கு ஐ போன்கள்பரிசுகளாக வழங்கப்படும்.

இந்தப் கேமை வடிவமைத்தவர்கள் ஏற்கெனவே இந்தியில் 'கபார்' தமிழில் 'கத்தி' போன்ற பல வீடியோ,மொபைல் கேம்களை வடிவமைத்து உருவாக்கிய SkyTou Studios நிறுவனத்தினர்தான். முந்தைய கேம்களை விட கூடுதல் விறுவிறுப்புடன் இது உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த கேமிலும் நாயகன் விஜய்யாக மாறி பரபரப்பான விளையாட்டை விளையாடலாம் செயற்கையான கார்,பைக் என வாகனங்களை ஓட்டுவதிலிருந்து இது முற்றிலும் புதுமையான அனுபவமாக இருக்கும்.இயற்கையான த்ரில்லிங்கான சாகச அனுபவமாக இருக்கும்.தயாரிப்புத் தரத்திலும் ஹாலிவுட் தயாரிப்புகளுக்கு இணையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

Game link : http://bit.ly/1Kd0FBt

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;