‘பில்லா 2’ வில்லன், ‘வேதாளம்’ நாயகி இணையும் படம்!

‘பில்லா 2’ வில்லன், ‘வேதாளம்’ நாயகி இணையும் படம்!

செய்திகள் 24-Oct-2015 2:52 PM IST Chandru கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘பையா’. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான சூப்பர்ஹிட் பாடல்களால் இப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. இப்படம் தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கார்த்தி கேரக்டரில் வித்யூத் ஜாம்வால் நடிக்க இருக்கிறாராம். இவர் தமிழில் ‘துப்பாக்கி’, ‘பில்லா 2’, ‘அஞ்சான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக, அதாவது தமிழில் தமன்னா நடித்த கேரக்டரில் நடிக்க ‘வேதாளம்’ பட நாயகியான ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ‘பையா’ படத்தை இயக்கிய லிங்குசாமியே, ஹிந்தியிலும் இயக்குவார் எனத் தெரிகிறது. அனைத்து விஷயங்களும் இறுதிசெய்யப்பட்ட பின்னர் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;