2வது முறையாக அஜித்திற்குக் கிடைத்த 50 லட்சம்!

2வது முறையாக அஜித்திற்குக் கிடைத்த 50 லட்சம்!

செய்திகள் 24-Oct-2015 10:59 AM IST Chandru கருத்துக்கள்

அஜித் படம் குறித்த எந்த விஷயத்தையும் சாதனை படைக்க வைப்பதற்காகவே ‘தல’ ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பம்பரமாய் சுழற்றுக் கொண்டிருப்பதால்... சாதனை என்பது அஜித் படங்களைப் பொறுத்தவரை சாதாரண விஷயம்தான்! யு டியூப்பில் டீஸர்/டிரைலர் பார்ப்பதையும் சாதனையாக்கத் தொடங்கியதே அஜித் ரசிகர்கள்தான். பார்வையாளர்கள் எண்ணிக்கை, லைக், டிஸ்லைக் என எல்லாவற்றையுமே அனைவரும் உற்றுநோக்கும் வகையில் சாதனையாக்கி வருகிறார்கள். அவர்கள் தொடங்கிவைத்த இந்த டிரென்ட் தற்போது எல்லா நடிகர்களின் ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் இந்திய அளவில் லைக்கில் 2ஆம் இடத்தைப் பிடிக்க வைத்து அனைவரின் கவனத்தையும் திருப்பினார்கள். அதனை விஜய் ரசிகர்கள் ‘புலி’ மூலம் முறியடிக்க, தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘வேதாளம்’ டீஸருக்கு 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள் தல ரசிகர்கள். இந்த ‘வேதாளம்’ டீஸர் தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது. ஆம்... இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ‘வேதாளம்’ டீஸரை கண்டுகளித்துள்ளனர். ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸரைத் தொடர்ந்து ‘வேதாளம்’ டீஸர் மூலம் 2வது முறையாக 50 லட்சம் பார்வையாளர்கள் என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறார் ‘தல’ அஜித்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;