இந்த நடிகை யாரென்று தெரிகிறதா?

இந்த நடிகை யாரென்று தெரிகிறதா?

செய்திகள் 24-Oct-2015 10:53 AM IST Chandru கருத்துக்கள்

சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ஒரு ஃபயரை பற்ற வைக்கும். அப்படி ஒரு தீப்பொறி கிளம்பியிருக்கிறது ‘சிகை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால். அந்த போஸ்டரில் பார்ப்பதற்கு அச்சு அசலாக மாடர்ன் லுக்கில் இருக்கும் பெண் யார் என ரசிகர்கள் பலரும் நகம் கடித்தபடி போஸ்டரை உற்றுப் பார்க்க ‘கதிர் நடிக்கும்’ என்ற வாசகங்கள் சிகை தலைப்பிற்கு மேலே இடம்பெற்றிருந்ததைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்துதான் போனார்கள். ஆம்... மதயானைக்கூட்டம், கிருமி ஆகிய படங்களில் நடித்த நடிகர் கதிர்தான் ‘சிகை’ படத்தில் பெண்ணாக நடிக்கிறாராம்.

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் உதவி இயக்குனரான ஜெகதீசன் சுபு ‘சிகை’ படத்தின் மூலம் இயக்குனராகிறார். 9 முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதைக்களம் அண்ணாநகரில் நகர்வதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். வெளிநாட்டில் படித்துவிட்டு சென்னைக்கு வரும் நபராக நடிகர் கதிர் இப்படத்தில் நடிக்கிறாராம். பல தோற்றங்களில் இப்படத்தில் வரும் கதிர், ஒருசில காட்சிகளில் பெண்ணாகவும் நடிக்கிறார். த்ரில்லர் படமான இந்த ‘சிகை’யில் சமூக கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;