‘நண்பன்’ விஜய் வழியில் ‘திருநாள்’ ஜீவா!

‘நண்பன்’ விஜய் வழியில் ‘திருநாள்’ ஜீவா!

செய்திகள் 24-Oct-2015 10:33 AM IST Chandru கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு தற்போது நயன்தாராவுடன் இணைந்து ‘திருநாள்’ படத்தில் நடித்து வருகிறார் ஜீவா. ‘ஈ’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இந்த ஜோடியின் இப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. கோதண்டபாணி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராம்நாத் இயக்குகிறார். மீனாட்சி, கருணாஸ், ஜோ மல்லூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தை 2016 பொங்கலை முன்னிட்டு தமிழர் திருநாளான தை 1ஆம் தேதி (ஜனவரி 14) வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்த ‘நண்பன்’ படம் 2012ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது அதே வழியில் ஜீவாவின் ‘திருநாள்’ படமும் பொங்கலை முன்னிட்டு ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;