சித்தார்த் படத் தலைப்பாக வடிவேலுவின் பிரபல வசனம்!

சித்தார்த் படத் தலைப்பாக வடிவேலுவின் பிரபல வசனம்!

செய்திகள் 23-Oct-2015 5:50 PM IST Chandru கருத்துக்கள்

‘எனக்குள் ஒருவன்’ படத்திற்குப் பிறகு, தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சித்தார்த். இப்படம் தவிர மலையாளப் படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சித்தார்த். அறிமுக இயக்குனரான தீரஜ் வைத்தி இயக்கும் இந்த முழுநீளக் காமெடி படத்தை Etaki Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. சித்தார்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தையும் இந்நிறுவனமே தயாரித்துள்ளது.

‘காதலன்’ படத்தில் நடிகர் வடிவேலு பேசும் காமெடி வசனமான ‘ஜில் ஜங் ஜக்’ என்பதையே இப்படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார்கள். இப்படம் குறித்த மேலும் சில விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;