‘நானும் ரௌடிதான்’ 2 நாள் வசூல் நிலவரம்!

‘நானும் ரௌடிதான்’ 2 நாள் வசூல் நிலவரம்!

செய்திகள் 23-Oct-2015 5:40 PM IST Chandru கருத்துக்கள்

தனுஷ் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும், பத்திரிகையாளர்களிடம் நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. விஜய் சேதுபதி, நயன்தாராவின் நடிப்பு, அனிருத்தின் இசை, இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர்களை வேலை வாங்கியிருக்கும் விதம் என இப்படத்திற்கு பல ப்ளஸ்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 250க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘நானும் ரௌடிதான்’ படம் முதல் 2 நாட்களிலேயே 4.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாளில் 2 கோடியே 16 லட்சம் ரூபாயையும், இரண்டாம் நாளில் 2 கோடியே 27 லட்சம் ரூபாயையும் ‘நானும் ரௌடிதான்’ வசூலித்துள்ளதாம். விஜய்சேதுபதி படங்களிலேயே மிக அதிகமாக ஓபனிங் கிடைத்த படமும் இதுதான் என்கிறார்கள். அதோடு முதல் 5 நாட்களில் இப்படத்தின் வசூல் 10 கோடியைத் தாண்ட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;