நயன்தாராவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

நயன்தாராவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

செய்திகள் 23-Oct-2015 1:55 PM IST Chandru கருத்துக்கள்

‘லேடி சூப்பர்ஸ்டார்’ பட்டத்திற்கு தகுதியானவர்தான் நயன்தாரா என்பதையே அவர் படங்களின் தொடரும் வெற்றி நமக்கு பறைசாற்றுகிறது. ஹீரோக்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய சினிமாவில் தனித்துவம் மிக்க கதாநாயகிகளின் பட்டியல் மிக மிகச் சிறியது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதுபோன்ற பட்டியலில் நயன்தாரா தற்போது உச்சத்திலிருக்கிறார். அவருக்காகவே படம் பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திரையில் அவர் முகம் தோன்றியதும் ஹீரோக்களுக்கு இணையான விசில் சப்தங்களும், கைதட்டல்களும் தியேட்டர்களை அதிரச் செய்கின்றன. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனக்கான கேரக்டராகவே மாறிவிடுகிறார் நயன்தாரா. இந்த தனித்துவம்தான் அவரை தற்போது உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.

‘தனி ஒருவன்’ மஹிமாவாக, ‘மாயா’ அப்சரவாக, ‘நானும் ரௌடிதான்’ காதம்பரியாக ஹாட்ரிக் வெற்றியைச் சுவைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த 3 படங்களுமே தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது இன்னுமொரு ஆச்சரியம். ‘தனி ஒருவன்’ படம் 60 நாட்களைக் கடந்தும், ‘மாயா’ 35 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. சாதனை நாயகியாகியிருக்கிறார் நயன்தாரா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;