‘தங்கமகன்’ குறித்து தனுஷ் வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

‘தங்கமகன்’ குறித்து தனுஷ் வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

செய்திகள் 23-Oct-2015 11:34 AM IST Chandru கருத்துக்கள்

‘மாரி’க்குப் பிறகு தங்கமகனாக மாறியிருக்கிறார் நடிகர் தனுஷ். தனது சொந்த தயாரிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் பணிபுரிந்த பலரும் இப்படத்திலும் இருப்பதால் ‘தங்கமகன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமந்தா, எமி ஜாக்ஸன் என இரண்டு நாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் தனுஷ் ட்வீட் மூலம் தகவல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

அதில், ‘தங்க மகன்’ படத்தின் ஆடியோ நவம்பரில் வெளியாகும் எனவும், மெலடி லவ்வர்களுக்குப் பிடித்த ஆல்பமாக ‘தங்க மகன்’ இருக்கும் என்றும், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் உருவாகியிருப்பதாகவும் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;