‘பாகுபலி’ நாயகனுக்கு வாழ்த்துச் சொன்ன ராஜமௌலி!

‘பாகுபலி’ நாயகனுக்கு வாழ்த்துச் சொன்ன ராஜமௌலி!

செய்திகள் 23-Oct-2015 11:26 AM IST Chandru கருத்துக்கள்

இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையோடு, 100 நாட்களைக் கடந்து இன்னும் வெற்றிகரமாக சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம். அப்படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்புத் திட்டமிடல்கள் தற்போது துரிதமாக நடந்துகொண்டிருக்கின்றன. பாகுபலி, ஷிவடு என இரண்டு கேரக்டர்களில் அப்படத்தில் நடித்த நடிகர் பிரபாஸிற்கு இன்று பிறந்தநாள். முதல் பாகத்தைவிட இரண்டாம்பாகத்திற்காக தன் உடல் எடையை இன்னும் அதிகமாக்கியுள்ள பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள இயக்குனர் ராஜமௌலி அவருடன் படப்பிடிப்பில் இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வாழ்த்துக்கள் பிரபாஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;