விஜய்சேதுபதியுடன் இணையும் ‘வா டீல்’ இயக்குனர்!

விஜய்சேதுபதியுடன் இணையும் ‘வா டீல்’ இயக்குனர்!

செய்திகள் 23-Oct-2015 11:14 AM IST Chandru கருத்துக்கள்

‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த சந்தோஷமான நேரத்தில் ஏற்கெனவே விஜய்சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் 3 படங்களோடு தற்போது புதிய பட அறிவிப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. விஜய்சேதுபதி தயாரித்து நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனமான ‘காமன்மேன் புரொடக்ஷன்’ தயாரிக்கும் புதிய படமொன்றில் விஜய்சேதுபதி நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அருண் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கும் ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்னசிவா, விஜய்சேதுபதியின் இந்த புதிய படத்தையும் இயக்கவிருக்கிறார். ‘சலீம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கணேஷ் சந்திரா இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன், லவ் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

விஜய்சேதுபதியின் நடிப்பில் உருவான மெல்லிசை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. அதோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்திலும், நலன்குமாரசாமி இயக்கத்தில் ‘காதலும் கடந்துபோகும்’ படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் ‘சேதுபதி’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;