உலக சினிமா அனுபவத்தைத் தந்த முதல் தமிழ்ப் படம்!

உலக சினிமா அனுபவத்தைத் தந்த முதல் தமிழ்ப் படம்!

செய்திகள் 23-Oct-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘விசாரணை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து, விருதையும் வென்றுள்ள இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி, அப்படத்தை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இதுகுறித்து அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்டேட்டஸ் இதோ...

நண்பர் இயக்குநர் வெற்றிமாறன் "சீனி படம் பார்க்கலாம் வாங்க" என்று அழைத்தார். விசாரணை திரைப்படம் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக தன் வசமிழந்து அகன்ற திரை என்னை கவ்விக்கொண்டது. 20 வருடமாக புரொஜக்டரில் மோட்டார் சப்தம் கேட்ட காலத்தில் இருந்து உலக சினிமா பார்த்து வரும் என்னை நாடி நரம்பு மூளை ஸ்தம்பிக்கும் விதமான அனுபவத்தை இப்படத்தில் பெற்றேன். திரைக்கதையிலும் இயக்கத்திலும் உலக சினிமாவிற்கான அனுபவத்தை நான் பெற்ற முதல் தமிழ்ப் படம் இது என்பேன். வளர்ந்து வரும் மூன்றாம் உலகநாடுகளுக்கான கலை வளர்ச்சி இந்த விசாரணை படம். இயக்குநர் வெற்றிமாறன் என்ற இந்த கலைஞனை இந்த நாடும் நாட்டு மக்களும் பொக்கிஷமாக பாதுகாப்பார்கள் அசலான அனுபவத்தை பரபரப்பான திரைக்கதையில் அழுத்தமாக நேர்மையாக தந்திருக்கிறார், ஒரு பள்ளியில் படித்து வந்தாலும் என் நண்பனை என் முன்னோடியாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள் வெற்றி...

பெருமையுடன்
சீனுராமசாமி

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

8 தோட்டாக்கள் - டீசர்


;