‘சவுகார்பேட்டை’யில் ஸ்ரீகாந்துக்கு மேக்-அப் போட்ட ராய் லட்சுமி!

‘சவுகார்பேட்டை’யில் ஸ்ரீகாந்துக்கு மேக்-அப் போட்ட ராய் லட்சுமி!

செய்திகள் 21-Oct-2015 1:04 PM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’, ‘கும்கி’ ஆகிய படங்களை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சவுகார்பேட்டை’. ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி ஜோடியாக நடித்திருக்க, சுமன், வடிவுக்கரசி, ரேகா, சரவணன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். பேய், திகில் வரிசையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருப்பவர் வி.சி.வடிவுடையான். கரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தையும் இவர் தான் இயக்கி வருகிறார். ‘சவுகார்பேட்டை’ படத்திற்கு ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது படம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ‘‘இப்படத்தில் நல்லவன், கெட்டவன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளேன். இது பேய், திகில், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கலந்த படம். இது மாதிரியான ஒரு படத்தில் நடித்தது புது அனுபவமாக இருக்கிறது. இது பேய் படம் என்பதால் மேக்-அப்பிற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டும், நிஜ சுடு காட்டில் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது. இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் ராய் லட்சுமி ரொம்பவும் சின்சியரான ஆர்டிஸ்ட்! அவர் ஏற்கெனவே சில ஹாரர் படங்களில் நடித்துள்ளார். ஆனால் எனக்கு இது முதல் படம். ராய் லட்சுமி மேக்-அப் விஷயத்தில் கூட ரொம்பவும் எக்ஸ்பர்ட்! அவருக்கான மேக்-அப் விஷயங்களே அவரே கவனித்துக் கொள்வார்! அத்துடன் சக நடிகர்களின் மேக்-அப் விஷயங்களில் கூட அவர் நிறைய உதவிகளை செய்வார். அந்த வகையில் எனக்கு கூட அவர் மேக்-அப் போட்டார்! அப்படியொரு சின்சியர் & டெடிகேடட் ஆர்டிஸ்ட் லட்சுமி ராய்’’ என்றார்.
இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் சுமன் பேசும்போது, ‘‘நான் கடந்த 38 வருடங்களாக நடித்து வருகிறேன். 350 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன். ஆனால் ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்த படம் இது தான். ‘சிவாஜி’ படத்திற்கு பிறகு எனக்கு நல்ல ஒரு படமாக ‘சவுகார்பேட்டை’ அமைந்துள்ளது. இந்த படம் வெளியான பிறகு நான் சென்னையில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் போகலாம்! ஆனால் சௌகார்பேட்டைக்கு மட்டும் போக முடியாது. ஏன் என்றால் சௌகார்பேட்டை சம்பந்தமாக நிறைய தாறுமாறான வசனங்களை இப்படத்தில் பேசி நடித்திருக்கிறேன். எல்லாம் இயக்குனர் வடிவுடையான் எழுதிய வசனங்கள் தான்! எது நடந்தாலும் அதற்கு இயக்குனர் தான் பொறுப்பு’’ என்றார் சிரித்துக் கொண்டே!
‘காஞ்சனா-2’, ‘ஸ்ட்ராபெரி’, ‘மாயா’ உட்பட பல திகில் படங்களை வாங்கி வெளியிட்ட ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தார் தான் இந்த ‘சவுகார்பேட்டை’ படத்தையும் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார்கள்! இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. ஹிந்தியிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;