வாழ்வியலை சொல்லும் படம் ‘பையன்’

வாழ்வியலை சொல்லும் படம் ‘பையன்’

செய்திகள் 21-Oct-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் தயாரித்திருக்கும் படம் ‘பையன்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் பைசல் நடிக்க, நாயகியாக புதுமுகம் ராகவி நடித்துள்ளார். ‘பசங்க’ சிவக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர்,அனுமோகன், த்தன் மோகன், வடிவுக்கரசி, சுரேஷ், உதய்ராஜ், சந்துரு, ரஞ்சன், விஜய்கணேஷ், புலிப்பாண்டி, வி.ஜி.பி.கோவிந்தராஜ், பழனிவேல் கவுண்டர், உமா சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பாலு மலர்வண்ணன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய்சூரஜ் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.எஸ்.ராகுல் இசையமைக்க, பாடல்களை மதுராஜ், சாகுல், வேணுஜி ஆகியோர் எழுதியுள்ளனர். ரமேஷ் ரெட்டி நடனம் அமைக்க, சேவியர் திலக் படத்தொகுப்பு செய்துள்ளார். திருத்துறைப்பூண்டி, வடசங்கந்தி, சேலம், ஈரோடு, பவானி, ஊராட்சிக் கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் பாலு மலர்வண்ணன் கூறும்போது, ‘‘வழக்கமான படம் என்பதை தாண்டி மக்களின் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்து இப்படத்தை படமாக்கியுள்ளேன். இயல்பான காட்சிகளுடன் உருவாக்கியுள்ள இப்படம் வாழ்வியலை சொல்லும் படமாக இருக்கும். அத்துடன் இது ஒரு மாற்று சினிமாவாகவும் இருக்கும்.
பெற்றோரை விட்டுப் பிரிதல், காதல் முளைக்கும் காலம், நட்பின் புரிதல்கள், தன் சொந்தக் காலில் நிற்க ஆசைப்படும் சுயம் என்றெல்லாம் ஒரு பையன் வாழ்வில் சந்திக்கும் அனுபவங்களை இப்படத்தில் இயல்பாக சொல்லி இருக்கிறேன். இது படம் பார்ப்பவர்களுக்கு தங்களது அனுபவத்தை பெறுவது போல இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்தியா பாகிஸ்தான் - ஒரு பொண்ண பார்த்தேன் மாமா வீடியோ சாங்


;