தனுஷ் V/S உதயநிதி ஸ்டாலின்!

தனுஷ் V/S உதயநிதி ஸ்டாலின்!

செய்திகள் 21-Oct-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் உருவாக்கியுள்ள படம் ‘தங்க மகன்’. வேல்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன், சமந்தா என இருவர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை டிசம்பர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான தனுஷே அறிவித்துள்ளார். இதே தினம் தான் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவக நடித்து வரும் ‘கெத்து’ திரைப்படமும் ரிலீசாகிறது. திருக்குமரன் இயக்கி வரும் இப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலினின் ஆஸ்தான் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை அமைப்பாளர். தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் ‘கெத்து’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விரைவில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்! தனுஷுடன் ‘தங்க மகன்’ படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்திருக்கும் எமி ஜாக்சன் தான் ‘கெத்து’ படத்தில் உதயநிதிக்கு ஜோடி! இதனால் எமி ஜாக்சன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதும் ரசிக்ரகளிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;