ஸ்ரீகாந்த் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

ஸ்ரீகாந்த் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 21-Oct-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் பட்ம் ‘ஓம் சாந்தி ஓம்’. சூர்யபிரபாகர் இயக்கி வரும் இப்படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நீலம் உபாதயா நடிக்கிறார். ‘8 பாயின்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் அருமை சந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் எபிநேசர் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் என அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் நேற்று சென்சார் குழுவினர் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இப்படத்தை இம்மாதம் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படம் தவிர ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு படம் ‘சவுகார்பேட்டை’. ஹாரர் பட வரிசையில் உருவாகியுள்ள இப்படமுமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலி 2 - டிரைலர்


;