பெரிய தொகைக்கு கைமாறிய ‘கபாலி’

பெரிய தொகைக்கு கைமாறிய ‘கபாலி’

செய்திகள் 20-Oct-2015 11:53 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய அளவில் அதிகம் எதிர்பார்கப்படும் படங்களில் ஒன்றான சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ பட பிசினஸ் வேலைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் 50 சதவிகிதத்தைக்கூடத் தாண்டவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே ‘கபாலி’யின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெரிய தொகை கொடுத்து சினி கேலக்ஸி என்ற நிறுவனம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த சினி கேலக்ஸி நிறுவனம் ஏற்கெனவே பல தெலுங்குப் படங்களின் வெளியீட்டு உரிமையை வாங்கி அமெரிக்காவில் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது. மனம், பவர், கோவிந்துடு அந்தரிவாடெலே, முகுந்தா உள்பட பல தெலுங்குப் படங்களை இந்நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளதாம். முதல்முறையாக இந்நிறுவனம் ரஜினி படமான ‘கபாலி’யை வெளியிடுவது அமெரிக்க வாழ் தமிழ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;