முதல் 2 இடங்களை கைப்பற்றிய வேதாளம், நானும் ரௌடிதான்!

முதல் 2 இடங்களை கைப்பற்றிய வேதாளம், நானும் ரௌடிதான்!

செய்திகள் 20-Oct-2015 11:05 AM IST Chandru கருத்துக்கள்

அடுத்தடுத்து வெளியான தனது இரண்டு ஆல்பங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த உற்சாகத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு ‘சிங்கிள் ட்ராக்’காக ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்துடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டன. யூத்களுக்கு மிகவும் பிடித்த ஆல்பமாக ‘நானும் ரௌடிதான்’ பாடல்களும், தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் ஆல்பமாக ‘வேதாளம்’ படத்தின் பாடல்களும் தற்போது பெரும்பாலான எஃப்.எம்.களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அதேபோல் ஐ ட்யூன்ஸில் தரவிறக்கம் செய்யப்படும் ‘டாப் 10’ தமிழ் ஆல்பங்களில் அஜித்தின் வேதாளம் முதலிடத்திலும், விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. தனித்தனி பாடல்களைப் பொறுத்தவரை வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா...’ முதலிடத்திலும், நானும் ரௌடிதான் படத்தின் ‘நீயும் நானும்...’ பாடல் 2வது இடத்திலும் உள்ளது. டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வேதாளம், நானும் ரௌடிதான் படப் பாடல்களே 9 இடங்களை கைப்பற்றியிருக்கின்றன.

இந்திய அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘தமாஷா’ ஆல்பம் முதலிடத்திலும், வேதாளம், நானும் ரௌடிதான் 2வது மற்றும் 3வது இடங்களிலும் இடம்பிடித்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;