நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் பாராட்டு!

நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் பாராட்டு!

செய்திகள் 20-Oct-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அது சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளர் டி.சிவா கையைழுத்துப் போட்டு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில்,
‘‘நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தலைவர் திரு.நாசர் அவர்களுக்கும், பொதுச் செயலாளர் பதவிக்கு வெற்றிபெற்றுள்ள திரு.விஷால் அவர்களுக்கும், துணை தலைவர்கள் பதவிக்கு வெற்றிபெற்றுள்ள திரு. பொன்வண்ணன் அவர்களுக்கும், மற்றும் திரு.கருணாஸ் அவர்களுக்கும், பொருளாளர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ள திரு.கார்த்தி அவர்களுக்கும் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பல நல்ல செயல் திட்டங்களை செயல்படுத்தவும் மனதார வாழ்த்துகிறோம்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;