விஜய் - ராஜா சந்திப்பு : மீண்டும் இணையத் திட்டமா?

விஜய் - ராஜா சந்திப்பு : மீண்டும் இணையத் திட்டமா?

செய்திகள் 20-Oct-2015 10:23 AM IST Chandru கருத்துக்கள்

புலி படத்தைத் தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் தனது 59வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். ‘காக்கி’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் நாயகியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. அந்த சந்திப்பின்போது, நடிகர் விஜய்யிடம் தன் அடுத்த படத்திற்கான கதையைக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மோகன் ராஜா, ‘இது ஒரு நட்பு ரீதியிலான சந்திப்புதான். விஜய்யும் நானும் இணைந்து படம் உருவாக்குவது குறித்து இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது’ என அவர் கூறியதாகத் தெரிகிறது.

‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஹிந்தியில் சல்மான் கானை நாயகனாக்கி, தனி ஒருவன் படத்தை பாலிவுட்டில் மோகன் ராஜா ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போது விஜய்யுடனான சந்திப்பு அந்த செய்தியை மறக்கடிக்கச் செய்துள்ளது. ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய்யும், ராஜாவும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;