மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை அழைக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்?

மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை அழைக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்?

செய்திகள் 20-Oct-2015 9:47 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு புறம் இயக்கம், இன்னொரு புறம் தயாரிப்பு என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து கொண்டிருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது தற்போதைய புராஜெக்ட்டான ‘அகிரா’வை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இதனால் அவரின் அடுத்த படம் எந்த மொழியில்? யார் ஹீரோ? நாயகி யார்? இசையமைப்பாளர் யார்? என பல்வேறு சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்... தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மகேஷ்பாபுவை நாயகனாக்கி படம் இயக்க முருகதாஸ் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படம் குறித்த இன்னொரு தகவலும் தற்போது வெளிவந்திருக்கிறது. ஆம்... படத்தின் இசையமைப்பாளராகப் பணியாற்ற மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜை ஏ.ஆர்.முருகதாஸ் அழைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார். தமிழில் முருகதாஸ் கடைசியாக இயக்கிய விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இந்நிலையில் முருகதாஸுடன் ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;