ஒப்பந்தம் ரத்து – சரத் அதிரடி பேட்டி!

ஒப்பந்தம் ரத்து – சரத் அதிரடி பேட்டி!

செய்திகள் 19-Oct-2015 5:55 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 15 ஆண்டுகளாக நடிகர் சங்கத்துக்காக பாடுபட்டுள்ளேன் என்றும் 2004-ல் 4.2 கோடியாக இருந்த நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டது என்றும் கூறினார். மேலும் அவர் கூறும்போது, ‘‘விஜயகாந்த் தலைவராக இருந்தபோது, கடன் அடைக்கப்பட்டு ஒரு கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. 2007-ல் கலைநிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு ரூ.2 கோடி வைப்பு நிதி திரட்டப்பட்டது. தற்போது நடிகர் சங்கத்தில் வைப்பு நிதியாக 3 கோடி ரூபாய் உள்ளது.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, 29 ஆண்டு 11 மாதத்துக்கு நடிகர் சங்க நிலம் குத்தகைக்கு அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க எஸ்.பி.ஐ.சினிமாஸ் உடனான அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. நான் தூய்மையானவன் என்று சரத்குமார் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;