திருமணம் பற்றிய கதை ‘ஒரு நாள் கூத்து’

திருமணம் பற்றிய கதை ‘ஒரு நாள் கூத்து’

செய்திகள் 19-Oct-2015 4:38 PM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘ஒரு நாள் கூத்து’. அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெதுராஜ், கருணாகரன், ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக், ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் வித்தியாசமான முறையில் நடைபெற்து.

‘ஒரு நாள் கூத்து’ திருமணம் பற்றிய கதையாம்! அதாவது திருமண நாள் அன்று நடக்கும் களேபரங்கள் தான் படத்தின் மைய கரு என்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். அதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து சொல்லியுள்ளாராம்! படம் திருமணம் பற்றிய கதை என்பதால் ஆடியோ விழாவுக்கு வந்திருந்த படக் குழுவினர் அனைவரும் ஒரே மாதிரியான பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்தனர்.

விழாவில் இயக்குனர்கள் மோகன் ராஜா, கே.வி.ஆனந்த், பாண்டிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.

இயக்குனர் மோகன்ராஜா பேசும்போது, ‘‘இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் நல்ல ஒரு விஷயத்தை இப்படத்தில் கையாண்டுள்ளார்’’ இப்படம் வெற்றிபெறும் என்றார். இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, ‘‘ஒவ்வொருவருடைய திருமண வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் இருக்கும். அதுபோன்ற நிகழ்வுகளை வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு நாள் கூத்து பல நாள் கூத்து மாதிரி நிறைய நாட்கள் ஓடும் என்ற நம்பிக்கை இப்படத்தின் பாடல்களையும், டிரைலரையும் பார்த்தபோது ஏற்பட்டது’’ என்றார்.

விரைவில் ரிலீசாகவிருக்கிற இப்படத்தை தொடர்ந்து ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் ‘உள் குத்து’, ‘புரூஸ்-லீ’ ஆகிய படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் - ஏண்டி உன்ன புடிக்குது பாடல் வீடியோ


;