நடிகர் சங்கத் தேர்தலில் கார்த்தி சாதனை வெற்றி!

நடிகர் சங்கத் தேர்தலில் கார்த்தி சாதனை வெற்றி!

செய்திகள் 19-Oct-2015 1:15 PM IST Chandru கருத்துக்கள்

சரத்குமார் அணிக்கும் பாண்டவர் அணிக்கும் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி பெரும்பான்மை வெற்றியை ருசித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமுள்ள 3139 ஓட்டுக்களில், நேரடியாக 1824 ஓட்டுக்களும், தபால் மூலமாக 821 ஓட்டுக்களும் பதிவாகின. நேற்று மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவுபெற, 6 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் பாண்டவர் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் நாசர், சரத்குமாரைவிட 113 ஓட்டுகள் அதிகம் பெற்று பெற்றி பெற்றார். நாசர் 1344 ஓட்டுகளையும், சரத்குமார் 1231 ஓட்டுகளையும் பெற்றனர். அதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் 1445 ஓட்டுகளையும், ராதாரவி 1138 ஓட்டுகளையும் பெற்றனர். ராதாரவியை விட 307 ஓட்டுகள் அதிகம் பெற்று விஷால் வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்காக பாண்டவர் அணி மூலம் களமிறக்கப்பட்ட நடிகர் கார்த்திக்கு அதிக அளவிலான வாக்குகள் கிடைத்தன. மொத்தம் 1493 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணனைவிட 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கார்த்தி. இந்த தேர்தலில் அதிக ஓட்டுகளை வாங்கியதும், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதும் நடிகர் கார்த்திதான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;