9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிசம்பரில் தனுஷ் படம்!

9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிசம்பரில் தனுஷ் படம்!

செய்திகள் 19-Oct-2015 11:37 AM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவினரின் இரண்டாவது படைப்பாக உருவாகிவரும் ‘தங்க மகன்’ படத்தின் வேலைகள் தற்போது பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நான்காவது முறையாக ரஜினி படத்தலைப்பை பயன்படுத்தியிருக்கும் தனுஷ், ‘தங்க மகன்’ படத்தை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரிலீஸ் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், படத்தை டிசம்பர் 18ஆம் தேதிதான் ரிலீஸ் செய்யவிருக்கிறோம் என தனுஷே தற்போது அறிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது ‘தங்க மகன்’ படமும் டிசம்பரில் ரிலீஸாவதால் இப்படமும் வெற்றிபெறும் என்ற சென்டிமென்ட் நிலவி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - சல்மார் வீடியோ சாங்


;