சில்வர் ஜூப்லியில் விக்ரம்!

சில்வர் ஜூப்லியில் விக்ரம்!

செய்திகள் 17-Oct-2015 5:54 PM IST VRC கருத்துக்கள்

1990-ல் ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விக்ரம். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ் படங்களில் சேது, தில், தூள், ஜெமினி, சாமி, பிதாமகன், அந்நியன், ஐ ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள். தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது, தமிழக அரசு விருது என பல விருதுகளை பெற்றுள்ள விக்ரம் நடிப்பில் வருகிற 21 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற படம் ‘10 எண்றதுக்குள்ள’. சினிமாவில் சில்வர் ஜூப்லி ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் விக்ரமின் அடுத்த வெளியீடாக வரவிருக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற்று அவரது கலைப் பயணம் வெற்றிகரமாக தொடர ‘டாப்10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;