அக்டோபர் 21... தல ரசிகர்களுக்கு மினி தீபாவளி!

அக்டோபர் 21... தல ரசிகர்களுக்கு மினி தீபாவளி!

செய்திகள் 17-Oct-2015 11:57 AM IST Chandru கருத்துக்கள்

டீஸர், பாடல்கள் ஹிட்டடித்த சந்தோஷத்திலிருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு விருந்தும் காத்திருக்கிறது. ஆம்... சின்னத்திரைகளில் கண்டுகளித்த அஜித்தின் வேதாளத்தை பெரிய திரையிலும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் கண்டுகளிக்கலாம். அன்றைய தினம் திரைக்கு வரவிருக்கும் விக்ரமின் ‘10 எண்றதுக்குள்ள’, விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ ஆகிய படங்களோடு அஜித்தின் ‘வேதாளம்’ பட டீஸரையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி உலகமெங்கும் ‘வேதாளம்’ படம் ரிலீஸாகவிருக்கிறது. தீபாவளியை தெறிக்கவிட வேண்டும் என காத்துக்கொண்டிருக்கும் தல ரசிகர்களுக்கு வேதாளம் டீஸர் திரையில் தோன்றும் நாளான அக்டோபர் 21ஆம் தேதி மினி தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;