ரஜினி பிறந்தநாளை குறிவைக்கும் தனுஷ்!

ரஜினி பிறந்தநாளை குறிவைக்கும் தனுஷ்!

செய்திகள் 17-Oct-2015 11:39 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினிக்கும் தனுஷுக்கும் மாமா - மாப்பிள்ளை என்ற உறவையும் தாண்டி, சூப்பர்ஸ்டாரை தன் தலைவராக ஏற்றுக் கொண்டவர் தனுஷ். அவரின் தீவிர ரசிகராக இருப்பதின் வெளிப்பாடோ என்னவோ 4வது முறையாக ரஜினி படத் தலைப்பை தன் படத்திற்கு சூட்டியிருக்கிறார். ஏற்கெனவே பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என 3 ரஜினி படத்தலைப்புகளை தன் படத்திற்கு சூட்டியவர் தற்போது ‘விஐபி’ டீமின் 2வது படைப்பாக உருவாகும் படத்திற்கும் ரஜினி படத்தலைப்பான ‘தங்கமகன்’ பெயரையே வைத்திருக்கிறார்.

வெறும் தலைப்பை மட்டும் பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல், ரஜினி மேலுள்ள அபிமானத்தைக் காட்டும் வகையில் ‘தங்கமகன்’ படத்தை ரஜினியின் பிறந்தநாளை (டிசம்பர் 12) முன்னிட்டு டிசம்பர் 11ஆம் தேதி வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடுவதற்கும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் டீஸரையும், அனிருத் இசையமைப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை டிசம்பர் 11ஆம் தேதி திட்டமிட்டபடி தங்கமகனை ரிலீஸ் செய்ய முடியவில்லையென்றால் கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைத்து டிசம்பர் 25ஆம் தேதி படத்தை வெளியிடும் எண்ணமும் இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;