1500 தியேட்டர்களில் வெளியாகிறது ‘இஞ்சி இடுப்பழகி’

1500 தியேட்டர்களில் வெளியாகிறது ‘இஞ்சி இடுப்பழகி’

செய்திகள் 16-Oct-2015 4:08 PM IST VRC கருத்துக்கள்

‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’. ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அனுஷ்கா வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களுடன் சோனல் சௌஹான், பிரகாஷ்ராஜ், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘சைஸ் சீரோ’ என்ற பெயரிலும் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற 27-ஆம் தேதி உலகம் முழுக்க கிட்டத்தட்ட 1500 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது இதனை ‘பிவிபி சினிமாஸ்’ நிறுவனத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பிரகாஷ் கோவேலமுடி இயக்கியுள்ள இப்படத்திற்கு மரகதமணி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுக்கு நீரவ்ஷா, பாடல்களுக்கு மதன் கார்க்கி என பெரும் கலைஞர்கள் பங்கேற்றுள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ ஏற்கெனவே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் படமாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;