50 நாட்களை கடந்த தனி ஒருவன்!

50 நாட்களை கடந்த தனி ஒருவன்!

செய்திகள் 16-Oct-2015 11:30 AM IST VRC கருத்துக்கள்

வரிசையாக பல வெற்றிப் படங்களை தந்த கூட்டணி மோகன் ராஜா, ‘ஜெயம்’ ரவி. இவர்களது சமீபத்திய சாதனை ‘தனி ஒருவன்’ திரைப்படம். இதுவரை வேறுமொழியில் ஜெயித்த கதைகளில் தனது தம்பியை நடிக்க வைத்து படங்களை இயக்கி வந்த மோகன் ராஜா சொந்தமாக திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவி, நயன்தாரா ஜோடியாக நடித்தாலும் இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்தது அரவிந்த்சாமி எற்று நடித்த வில்லன் கேரக்டர் தான்! ரசிகர்களின் பேராதரவு பெற்று சூப்பர் ஹிட்டான ‘தனி ஒருவன்’ திரைப்படம் வெளியாகி இன்று 50ஆவது நாளை எட்டியுள்ளது. இன்னமும் ஏராளமான தியேட்டர்களில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘தனி ஒருவன்’ படத்திற்கு ரசிகர்கள் தந்துள்ள பெரும் அதரவை பார்க்கும்போது இப்படம் 100 நாட்களை கடந்து ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை படைத்துள்ள ‘தனி ஒருவன்’ படக் குழுவினருக்கு ‘டாப்10 சினிமா’வின் பாராட்டுக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;