100… இன்னும் தொடர்கிறது ‘பாகுபலி’யின் பயணம்!

100… இன்னும் தொடர்கிறது ‘பாகுபலி’யின் பயணம்!

செய்திகள் 16-Oct-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான பிரம்மாண்டமான படம், வசூலில் பெரும் சாதனை படைத்த படம் என பல சாதனைகள் நிகழ்த்திய திரைப்படம் ராஜமௌலியின் ‘பாகுபலி’. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், கீரவாணி, சாபுசிரில் என பல பெரும் கலைஞர்கள் கை கோர்த்து உருவாக்கிய இந்த பிரம்மாண்டமான படைப்பு கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகின! ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்த இப்படம் இன்று 100-ஆவது நாளை எட்டியுள்ள நிலையிலும் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்திய சினிமா சரித்திரத்திலேயே பெரும் சாதனை படைத்த ‘பாகுபலி’யின் வெற்றி இந்திய சினிமா உலகினரை மட்டுமல்லாமல், உலக அளவிலும் பேசப்பட வைத்துள்ளது! இந்த சாதனையுடன் ‘பாகுபலி’யின் இரண்டாம் பாகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ‘பாகுபலி’ படக்குழுவினருக்கு ‘டாப்10சினிமா’வின் இனிய நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;