‘வேதாள’த்தை முந்தும் ‘தூங்கா வனம்’

‘வேதாள’த்தை முந்தும் ‘தூங்கா வனம்’

செய்திகள் 15-Oct-2015 2:56 PM IST Chandru கருத்துக்கள்

இந்த வருட தீபாவளியை ‘தெறிக்கவிடணும்’ என தல ரசிகர்கள் வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் தங்கள் உலகநாயகனை ‘ஸ்டைலிஷ் காப்’ கேரக்டரில் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள். இரண்டு படங்களும் தீபாவளியை முன்னிட்டுதான் வெளியாகிறது என்றாலும், எந்த தேதியில் எந்தப் படம் வரும்? வேதாளம் முதலில் வருமா? தூங்கா வனம் முதலில் வருமா? என்பன போன்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கின்றன.

வேதாளம் படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்றுதான் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அஜித் படம் தீபாவளியன்று... அதாவது நவம்பர் 10ஆம் தேதிதான் உலகமெங்கும் வெளியாகிறது என படத்தை வாங்கியிருக்கும் விநியோகஸ்தர் ஒருவர் கூறுகிறார். அதேபோல் ‘தூங்கா வனம்’ நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால், இப்போதைய நிலவரம் வேறு... கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியே படத்தை வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உலகநாயகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘வேதாள’த்தை தூங்கா வனம் முந்துமா என்பதை தீபாவளி நெருங்கும் நேரத்தில் தெரிந்துகொள்ளலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;