‘திருசியம்’ நாயகன், ‘பாபநாசம்’ நாயகி இணையும் படம்!

‘திருசியம்’ நாயகன், ‘பாபநாசம்’ நாயகி இணையும் படம்!

செய்திகள் 15-Oct-2015 1:58 PM IST VRC கருத்துக்கள்

மோகன்லாலும், கௌதமியும் இணைந்து நடித்து 1990-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான மலையாள படம் ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் மோகன்லாலும், கௌதமியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படம் மலையாளத்தில் உருவாகவில்லை, தெலுங்கில் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் சில படங்களை இயக்கிய சந்திரசேகர் எலேடி தான் இப்படத்தை இயக்குகிறாராம். இயக்குனர் சந்திரசேகர் எலேடிக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் மோகன்லாலும் ஒருவராம்! மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசையாம்! இவர்கள் இணையும் இந்த படம் குடும்ப சென்டிமென்ட் கலந்த கதையாம்! அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நமது - டிரைலர்


;