‘சாஃப்ட் லுக்’ கணேஷ், ‘டான்’ வேதாளம் - மிரட்டும் தல!

‘சாஃப்ட் லுக்’ கணேஷ், ‘டான்’ வேதாளம் - மிரட்டும் தல!

செய்திகள் 15-Oct-2015 10:57 AM IST Chandru கருத்துக்கள்

இப்படி ஒரு பெயரை ‘தல 56’ படத்திற்கு வைப்பார்கள் என யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். இதுவரை ‘வேதாளம்’ என்பதை சாதாரண உச்சரித்த உதடுகள்கூட, அஜித் படத்தலைப்பாக மாறிய பின்பு ‘மாஸ்’ டயலாக்காக மாற்றி உச்சரிக்கின்றன. ‘வேதாளம்’ என்ற டைட்டில் இப்படத்திற்கு எதற்காக வைத்தார்கள் என ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்க, அஜித்தின் கேரக்டர் பெயர்தான் இந்த ‘வேதாளம்’ என்கிறது படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம். கதைப்படி, லக்ஷ்மிமேனனுக்கு அண்ணனாக ‘சாப்ட் லுக்’ அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி டிரைவராக வேலை செய்பவரராம். இவரின் கேரக்டர் பெயர் கணேஷ். அவரின் நண்பராக வரும் சூரியும் டாக்ஸி டிரைவராக நடித்திருக்கிறாராம். அஜித்தின் அப்பாவாக தம்பி ராமையா நடித்திருக்கிறார்.

அஜித்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியின்போதுதான் உண்மையில் அவர் ஒரு ‘டான்’ என்பதே எல்லோருக்கும் தெரிய வருமாம். தாதா அஜித்தின் பெயர்தான் ‘வேதாளம்’ என்கிறார்கள். ஆட்டம், பாட்டம், அடிதடி, வெட்டுக்குத்து என இந்த ‘வேதாளம்’ கேரக்டரில் அஜித் அதகளப்படுத்தியிருக்கிறாராம். அதற்கு சாம்பிளாக நேற்று இரவு அனிருத்தின் அதிரடி இசையில் ‘ஆலுமா... டோலுமா...’ என்ற பாடலின் வீடியோ டீஸர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் இசையையும் தாண்டி ரசிகர்களை கவர்ந்த இன்னொரு விஷயம். அஜித்தின் லுக்கும், அதிரடி ஆட்டமும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;