விஜய் ரசிகராக மாறும் பிருத்திவிராஜ்!

விஜய் ரசிகராக மாறும் பிருத்திவிராஜ்!

செய்திகள் 15-Oct-2015 10:57 AM IST VRC கருத்துக்கள்

சூப்பர் ஹிட்டானா ‘எந்நு நின்டெ மொய்தீன்’ என்ற படத்தை தொடர்ந்து பிருத்திவி ராஜ் நடித்து வரும் மலையாள படம் ‘பாவாட’. காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய்யின் ரசிகராக நடிக்கிறார் பிருத்திவிராஜ். விஜய் படம் வெளியாகிற தினம் முதல் காட்சியையே நண்பர்களுடன் பார்த்து விடுகிற தீவிர ரசிகராக இப்படத்தில் நடிக்கிறாராம் அவர்! தமிழகத்தை தொடர்ந்து விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன் பின்னணியில் ப்ருத்திவிராஜின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது என்று குறப்படுகிறது. ஜி.மார்த்தாண்டன் இயக்கும் இப்படத்தில் பிருத்திவிராஜுடன் ஷோபனா, பிஜு மேனன் முதலானோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;