பிரகாஷ் ராஜ் படத்திற்கு இளையராஜா இசை!

பிரகாஷ் ராஜ் படத்திற்கு இளையராஜா இசை!

செய்திகள் 15-Oct-2015 10:35 AM IST VRC கருத்துக்கள்

ப்ரியதர்சன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முதலானோர் நடிக்கும் ‘சில சமயங்களில்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! ‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு ப்ரியதர்சன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி மீண்டும் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தை நடிகை அமலாபாலின் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ நிறுவனமும், பிரபு தேவாவின் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது இளையராஜா இசை அமைக்கவிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த இப்படத்தை இளையாராஜாவுக்கு போட்டு காண்பித்துள்ளார் ப்ரியதர்சன். படத்தை பார்த்ததும் நெகிழ்ந்து போன இளையராஜா படத்தை பாராட்டியதோடு, இசை அமைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவலை நடிகை அமலா பால் தனது ஃபேஸ்புக் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;