மன்சூர் அலிகானுக்கு கட்-அவுட் வைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

மன்சூர் அலிகானுக்கு கட்-அவுட் வைக்கும் ஜி.வி.பிரகாஷ்!

செய்திகள் 15-Oct-2015 10:28 AM IST Chandru கருத்துக்கள்

இரண்டே படங்களில் இளசுகளின் இதயங்களில் இடம்பிடித்துவிட்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘கெட்ட பையன் இந்த கார்த்தி’, ‘புரூஸ் லீ’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ‘புரூஸ் லீ’ படத்தை ‘நாளைய இயக்குனர் சீஸன் 4’ல் பங்குபெற்ற பிரசாந்த் அறிமுகப் படமாக இயக்குகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகை கீர்த்தி கர்பந்தா தமிழில் முதல்முறையாக களமிறக்கப்படுகிறார்.

படத்தின் கதைப்படி பயந்த சுபாவமுள்ள இளைஞன் ஒருவன் தன்னை புரூஸ் லீ போல் நினைத்துக் கொண்டு செய்யும் சேட்டைக்காகத்தான் இப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், நடிகர் மன்சூர் அலிகானின் ரசிகராக நடிக்கிறார். அவருக்கு கட்-அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என யாரும் எதிர்பார்க்காத ஒரு புது ஜி.வி.யை ‘புரூஸ் லீ’யில் பார்க்கலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;