ரஜினிக்கு வில்லனா? - விக்ரம் விளக்கம்

ரஜினிக்கு வில்லனா? - விக்ரம் விளக்கம்

செய்திகள் 15-Oct-2015 10:01 AM IST Chandru கருத்துக்கள்

‘மெட்ராஸ்’ ரஞ்சித் இயக்கத்தில் தற்போது ‘கபாலி’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி. இப்படத்தை முடித்ததும் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ 2ம் பாகத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. அதோடு இந்த 2ம் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸனும், வில்லனாக விக்ரமும் நடிக்கிறார்கள் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இயக்குனர் ஷங்கரும் ‘நாங்கள் அறிவிக்கும் வரை அமைதி காக்கவும்’ என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டுப் போனார்.

தற்போது வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் விக்ரம் ‘‘எந்திரன் 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை. இதுபோன்ற செய்திகள் குறித்து ஷங்கரிடம்தான் கேட்க வேண்டும்!’’ என கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதேபோல் தன் மகன் துருவ்-க்கு இப்போதைக்கு நடிக்கும் எண்ணம் இல்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார் விக்ரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;