அஜித் + அனிருத்... ‘வேதாளம்’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

அஜித் + அனிருத்... ‘வேதாளம்’ ஆல்பத்தில் என்ன ஸ்பெஷல்?

கட்டுரை 14-Oct-2015 5:15 PM IST VRC கருத்துக்கள்

வரும் 16ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘வேதாளம்’ இசை ஆல்பத்தின் முன்னோட்டமாக தற்போது அதில் இடம் பெற்றிருக்கும் பாடல்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் அனிருத் இசையமைக்கும் முதல் தல படம் என்பதால் அஜித் ரசிகர்கள் ‘வேதாளம்’ ஆல்பத்திற்காக ரொம்பவே காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் இணைந்த அனிருத், ‘வேதாள’த்தில் அஜித்துடன் இணைந்திருப்பதால் விஜய் ரசிகர்களும் இப்படத்தின் பாடல்கள் எப்படியிருக்கும் என நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வேதாளம்’ ஆல்பத்தில் அப்படியென்ன ஸ்பெஷல் காத்திருக்கிறது?

1. வீர விநாயகா...
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், விஷால் தட்லானி
பாடலாசிரியர் : விவேகா

2. டோன்ட் யூ மெஸ் வித் மீ...
பாடியவர்கள் : ஸ்ருதிஹாசன், ஷக்திஸ்ரீ கோபாலன்
பாடலாசிரியர் : கார்க்கி

3. உயிர் நதி கலங்குதே...
பாடியவர் : ரவிசங்கர்
பாடலாசிரியர் : விவேகா

4. தி தெறி தீம்...
பாடியவர் : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : சிவா

5. ஆலுமா டோலுமா...
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர், பாட்ஷா
பாடலாசிரியர் : ஜி.ரோகேஷ்

படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் ஒரு பாடலையும், இசையமைப்பாளர் அனிருத் 3 பாடல்களையும் பாடியிருக்கிறார்கள். அதோடு இயக்குனர் சிவா ‘தீம்’ பாடலுக்கான வரிகளை எழுதியிருப்பதும், பாலிவுட் பிரபலங்களான விஷால் தட்லானி, பாட்ஷா ஆகியோரும் பாடியிருப்பது ‘வேதாளம்’ ஆல்பத்தின் சிறப்பம்சங்களாகும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;