பாபா ஜீவசமாதி அடைந்த நாளில் ‘அபூர்வ மகான்’

பாபா ஜீவசமாதி அடைந்த நாளில் ‘அபூர்வ மகான்’

செய்திகள் 14-Oct-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

‘டி.என்.எஸ்.தேவர் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க, கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அபூர்வ மகான்’. இப்படத்தில் ‘தலைவாசல்’ விஜய் சாய் பாபா வேடமேற்று நடித்திருக்கிறார். இவருடன் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடித்திருக்கிறார்கள். மற்றும் சுமன், பவர் ஸ்டார் சீனிவாசன், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய் ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், ஆகியோருடன் நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தியும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் கே.ஆர்.மணிமுத்து.
அவர் படம் குறித்து பேசும்போது,

‘‘மனிதனாக பிறந்து மகானாக வாழ்ந்த பாபா அவகளின் வாழ்க்கை வரலாறுதான் இப்படம். இந்த படத்தை வெளியிட முடிவு செய்தபோது, படத்தை பார்த்த எம்.ஆர்.கிரியேஷன்ஸ் A.ஜோதி முருகன் அவர்கள் படத்தை வாங்கி நான் ரிலீஸ் செய்கிறேன். பாபா படத்தை ரிலீஸ் செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றார். ரிலீஸ் வேலைகளை தொடங்கி இம்மாதம் 22-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டோம் . அப்போது நண்பர் ஒருவர் நீங்கள் ரிலீஸ் செய்யும் தேதி தான் பாபா ஜீவ சமாதி அடைந்த நாள் என்று கூறினார். அவர் சொல்லிய பிறகுதான் எங்களுக்கே அது தெரியும். பாபா ஜீவ சமாதி அடைந்த நாளில் இப்படம் ரிலீசாவது நாங்கள் செய்த பாக்கியம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;