அஜித்தின் வேதாளத்தில் பாட்ஷா!

அஜித்தின் வேதாளத்தில் பாட்ஷா!

செய்திகள் 14-Oct-2015 11:17 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீஸான ‘வேதாளம்’ டீஸர் 40 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரும் 16ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேதாளம்’ படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கின்றனர். மொத்தம் 5 பாடல்களும், 1 தீம் மியூசிக்கும் இந்த ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கிறதாம். இதில் ஒரு பாடலைப் பாடுவதற்காக பஞ்சாப் பாடகர் ஒருவரை அழைத்து வந்து தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் அனிருத். அந்த பாடகர் பெயர் பாட்ஷா. பஞ்சாப் மொழியில் ராப் இசை பாடகராக புகழ்பெற்று விளங்கும் பாட்ஷா பாலிவுட் படங்களுக்கும் பாடியுள்ளார். தமிழில் ‘வேதாளம்’ மூலம் அறிமுகமாவதால் பாட்ஷா பாடியிருக்கும் பாடலைக் கேட்க ‘தல’ ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

‘வேதாளம்’ டீஸரின் நடுவே ‘தெறி...’ என் வார்த்தை வரும். அதேபோல் டீஸரின் முடிவில் ‘தெறிக்கவிடலாமா..?’ என அஜித் கேட்பார். இந்த ‘தெறி’ என்ற வார்த்தையை வைத்து உருவான பாடலைத்தான் ராப் பாடகர் பாட்ஷா பாடியிருக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;