‘புலி’ வசூல் எவ்வளவு? - அதிகாரபூர்வ அறிவிப்பு

‘புலி’ வசூல் எவ்வளவு? - அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 14-Oct-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டவர்கள் நடித்த ‘புலி’ படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஃபேன்டஸி படமாக வெளிவந்த ‘புலி’ படம் விமர்சனரீதியாக பின்னடைவைச் சந்தித்தது. அதோடு முதல் நாள் சிறப்புக்காட்சிகளும் சிற்சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. இதனால் வழக்கமாக விஜய் படங்களுக்கு முதல்நாள் கிடைக்கும் வசூல் ‘புலி’ படத்தைப் பொறுத்தவரை சற்று குறைவுதான். அதோடு சமூக வலைதளங்களிலும் ‘புலி’ படத்தை கிண்டல் செய்து நிறைய ‘மீம்ஸ்’களும் வெளிவரத் தொடங்கின. இதனால் ‘புலி’யின் வசூல் பாதிப்பை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் முதல்வார முடிவில் ‘புலி’யின் கலெக்ஷன் எவ்வளவு? என ஆளாளுக்கு ஒரு தொகையை அவிழ்த்துவிட, இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘புலி’ படம் முதல் வாரத்தில் எவ்வளவு கலெக்ஷன் செய்துள்ளது என்பதை அதன் தயாரிப்பு நிறுவனமான ‘எஸ்கேடி ஸ்டியோஸ்’ அறிவித்துள்ளது.

முதல்வாரத்தில் மட்டும் உலக அளவில் ‘புலி’ திரைப்படம் 71 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது ‘எஸ்கேடி ஸ்டுடியோஸ்’ நிறுவனம். மாறுபட்ட விமர்சனங்களை ‘புலி’ படம் சந்தித்தபோதும், இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்திருக்கிறது என்பதையும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;